அவனியாபுரம் வந்தடைந்தார் ராகுல் காந்தி!

Former Congress leader Rahul Gandhi has been announced as coming to Tamil Nadu, but now Rahul Gandhi has arrived in Madurai Avanyapuram.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ராகுல் காந்தி அவர்கள் மதுரை அவனியாபுரத்தை வந்தடைந்துள்ளார்.

இன்று தமிழகம் முழுவதும் தை திருநாளாம் பொங்கலை மக்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். தமிழர் திருநாள் என்றாலே தமிழர்களின் வீரத்தை வெளிக்காட்டும் விதமாக பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் ராகுல் காந்தி அவர்கள், மதுரை அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்வை காண்பதற்காக தமிழகம் வருவதாக ட்வீட் செய்திருந்தார். தற்போது, ராகுல் காந்தி அவர்கள் மதுரை அவனியாபுரத்தை வந்தடைந்துள்ளார்.