சென்னையில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

போய்ஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, உள்ளிட்ட பல இடங்களில் நாளை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hero Image

சென்னை : பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (27.05.2026) தேனாம்பேட்டை மின்வாரிய எல்லைக்குட்பட்ட பல பகுதிகளில் தற்காலிக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், பராமரிப்பு பணிகள் முன்கூட்டியே முடிந்தால் அதற்கு முன்பாகவே மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் வருமாறு:

போய்ஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, எலாங்கோ சாலை, போய்ஸ் ரோடு, ராஜகிருஷ்ணன் சாலை, எல்டாம்ஸ் ரோடு, பெரியார் சாலை, காமராஜர் சாலை, சீதம்மாள் காலனி, கே.பி. தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு,

பார்த்தசாரதி பேட்டை, அப்பாதுரை தெரு, டி.டி.கே. ரோடு, கதீட்ரல் ரோடு, ஜே.ஜே. ரோடு, பார்த்தசாரதி கார்டன், கே.ஆர். ரோடு பகுதிகள், ஜார்ஜ் அவென்யூ, எஸ்.எஸ்.ஐ ரோடு, எச்.டி. ராஜா தெரு, ஏ.ஆர்.எல். காலனி, அண்ணாசாலை பகுதி, வேணு காலனி, முர்ரேஸ் கேட் ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.