பயிர்களை சேதப்படுத்தியதால் மயில்களுக்கு விஷம் வைப்பு – ஒருவர் கைது!

A Cuddalore farmer has been arrested for killing peacocks by poisoning them alone after damaging crops.

பயிர்களை சேதப்படுத்தியதால் தானியத்துடன் விஷம் வைத்து மயில்களை கொன்ற கடலூரை சேர்ந்த விவசாயி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாச்சலம் எனும் பகுதியில் உள்ள சந்திரன் எனும் விவசாயி தனது வயல்களில் வந்து பயிர்களை சேதப்படுத்த கூடிய மயில்களுக்கு தானியத்தில் விஷம் வைத்துள்ளார். இந்த தானியங்களை சாப்பிட்ட 5 மயில்கள் இதுவரை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயிர்களை சேதப்படுத்துவதால் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்ற சந்திரன் எனும் விவசாயி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து அருகிலுள்ள விவசாயிகள் கூறுகையில், அப்பகுதியில் மயில்களுக்கு என குறிப்பிட்ட இடத்தில் தானியங்கள் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பொழுது தான் மயில்களையும் விவசாயிகளையும் பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.