சென்னையில் பாஜக பொதுக்கூட்டம்..! பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

PM Modi: சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு இன்று வந்தார்.

annamalai

PM Modi: சென்னை நந்தனத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். மோடி ஒருநாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு இன்று வந்தார். கல்பாக்கத்தில் அணுசக்தி துறையின் பணிகளை தொடங்கி வைத்த அவர் சென்னையில் “தாமரை மாநாடு” என்ற பெயரில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்த பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் பங்கேற்று உரையாற்றினார். மேலும் கட்சியின் முக்கிய தலைவர்களான கரு.நாகராஜன், பேராசிரியர் சீனிவாசன், குஷ்பு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

Read More –ஒருநாள் பயணமாக சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி..!

இதனுடன் கூட்டணி கட்சிதலைவர்களும் பங்கேற்றுள்ளனர், அதன்படி தாமக தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பிரதமர் வருகையையொட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.