தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி!

The Government of Tamil Nadu has given permission to operate bars which is in tasmac with 50% seats in Tamil Nadu.

தமிழகத்தில் 50 சதவித இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது விடுத்துள்ள தளர்வுகளின்படி, டாஸ்மாக் கடையில் உள்ள பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியது. மேலும் பார்களுக்கு வருபவர்கள், தங்களின் தொலைபேசி எண்கள் பதிவு செய்வது கட்டாயம். உடல் வெப்ப நிலை பரிசோதிக்க வேண்டும், பார்களில் சானிடைசர்கள் வைக்க வேண்டும் என கொரோனா தடுப்பு விதிகள் விதிக்கப்பட்டுள்ளது.