குற்றம் செய்தவர்கள் மக்களுக்கு தெரிவது அவசியம் – சரத்குமார்

samathuva makkal katchi leader Sarath Kumar has said that there was no mistake in conducting an inquiry into the Kodanad affair.

கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் தவறில்லை என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கோடநாடு எஸ்டேட்டில் அசம்பாவிதம் நடந்திருப்பது உண்மை. இதனை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது. அதனால், விசாரணை நடத்துவது குறித்து எதற்கு பயப்பட வேண்டும்.

நியாமான முறையில் எல்லாரும் விசாரிக்கப்பட வேண்டியவர்கள் தான். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை குற்றம் செய்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரிவது மிகவும் அவசியம். எனவே, கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதில் எந்த  தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.