சென்னை :இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் சென்று தங்களுடைய மரியாதையைச் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளிட்ட பலரும் தங்களுடைய மரியாதையைச் செலுத்தி இருந்தார்கள்.
மேலும், சிலர் தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் தங்களுடைய மரியாதையை செலுத்தி இருந்தார்கள். அந்த வகையில், ஏற்கனவே, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மரியாதையை செலுத்தி இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது ” அய்யா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார். இந்திய விடுதலைக்காகக் காத்திரமாகக் களமாடியவர்.
மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படையை வலுப்படுத்தத் துணை நின்றவர். பாராளுமன்ற, சட்டமன்ற அரசியலில் முத்திரை பதித்த பேச்சுக் கலைப் பேரரசர்.சமூக நல்லிணக்கம் பேணியவர். தமிழக அரசியலின் முக்கிய அடையாளங்களில் ஒருவராகவும் மாறிய, மகத்தான மனிதரை அவரது குருபூஜைத் திருநாளில் வணங்கி வாழ்த்திப் போற்றுவோம்” என விஜய் கூறியுள்ளார்” எனப் பதிவிட்டு இருந்தார்.
அதனைத் தொடர்ந்து அடுத்ததாகச் சென்னை பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்கத் தேவர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான விடீயோவையும் அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
அதில் ” இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட அய்யா பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்” எனவும் கூறியுள்ளார்.
unknown node