வரும் 31ல் கட்சி அறிவிப்பு: 3 நாளில் சென்னை திரும்புகிறாரா ரஜினி? – மு.க அழகிரி

MK Alagiri inquired about Rajinikanth's health over the phone after he was admitted to the Apollo Hospital in Hyderabad.

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக மு.க அழகிரி நலம் விசாரித்துள்ளார்.

ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக நடிகர் ரஜினி தொலைபேசியில் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது. ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்வது என்பது பற்றி இன்று மாலை முடிவு வெளியிடப்படும் என கூறியுள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் புதிதாக தொடங்கவுள்ள கட்சி குறித்த அறிவிப்பை வரும் 31-ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். கட்சி பணிகள் வேகமாக நடைபெற்று நிலையில், தற்போது ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவனையில் ரஜினி அனுமதிக்கப்ட்டுள்ளார். சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் என்பதே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் வேண்டுதலாக உள்ளது. ஆனால், மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.