ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை தொலைபேசி வாயிலாக மு.க அழகிரி நலம் விசாரித்துள்ளார். ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து போனில் நலம் விசாரித்தேன் என முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2 அல்லது 3 நாட்களில் சென்னை திரும்ப உள்ளதாக நடிகர் ரஜினி தொலைபேசியில் கூறினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினியின் உடல்நிலையில் நல்ல […]
ரஜினியின் ரத்த அழுத்தத்தில் முன்னேற்றம் இருந்தாலும், ரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக நேற்று ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த மாறுபாட்டை கட்டுப்படுத்த தேவையான சிகிச்சை அளிக்கப்படுவதாக அப்போலோ தெரிவித்துள்ளது. நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என ரஜினி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில், ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நிலையில் நல்ல […]
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருபவர் பேராசிரியர் க. அன்பழகன். உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் கட்சியின் முக்கிய கூட்டங்க்ளை தவிர மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு திமுக பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தகவல் அறிந்த திமுக […]