தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது- திருநாவுக்கரசர்
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அந்த கட்சி தனியாக இந்தியாவில் மொத்தம் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது.தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல் வெளியானது.ஆனால் அவர் விலகவில்லை.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.தேர்தலில் ஏற்பட்ட சறுக்கலுக்கு ராகுல் காந்தி மட்டுமே பொறுப்பேற்க முடியாது என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.