நாளை ஆம்னி பேருந்துகள் இயங்காது – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு!

All Omni Bus Owners Association announces that Omni buses will not run during the day and night as there will be a full curfew on Sunday tomorrow.

நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.

தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள நிலையில்,  இன்று இரவு 10 மணி முதல் திங்கள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.

நாளை முழு ஊரடங்கில், பொதுப் போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவை இயங்காது. வெளியூர்களிலிருந்து வரும் பயணிகளின் நலன் கருதி, சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள் இயக்கப்படும். செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் நாளை (ஞாயிறு) முழு ஊரடங்கு என்பதால் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (ஜன.24) முதல் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.