ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதுமான வசதி இல்லாததால், கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவ்வாறு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அவகாசம் தர வேண்டும் எனவும் உரிமையாளர்கள் தரப்பிலும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று இரவு […]
நாளை முதல் ஆம்னி பேருந்துகளை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்றிரவு 7 மணிக்கு மேல் சென்னை நகருக்குள்ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். […]
கோவையில் இருந்து சென்னைக்கு வர எனக்கு விமான டிக்கெட் 3,300 ரூபாய். ஆனால் ஆம்னி பேருந்து கட்டணம் என்பது 3,700 ரூபாயாக இருக்கிறது. இதனை அரசு குறைக்க நடவடிக்கை வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்தார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் , மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தார். அவர் பேசுகையில், ‘ நேற்று ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதித்து […]
ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்காது என அமைச்சர் சிவசங்கர் பேட்டி. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் ஆமினி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எதிர்காலத்தில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளில் பல்வேறு வகைகள் இருப்பதால் பல்வேறு […]
நாளை ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் பகல், இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு. தமிழகம் முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு நேர ஊரடங்கு மற்றும் கடந்த 2 வாரங்களாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இரவுநேர ஊரடங்கு உள்ள […]