#BREAKING: யூடியூப் சேனல்களுக்கு மகேஷ் குமார் அகர்வால் எச்சரிக்கை..!

He said that stern action will be taken if the interviews are aired on YouTube channel in the coming days. Mahesh Kumar Agarwal warns

சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில்,  ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில், வரும் நாட்களில் யூடியூப் சேனலில் பேட்டிகளை ஒளிபரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், இதேபோன்று ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் ஏற்கனவே பதிவு செய்த வீடியோக்களை நீக்கவும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். சமீபத்தில் ஆபாசமான பேட்டியை ஒளிபரப்பியதாக யூ டியூப் சேனல் ஒன்றின் உரிமையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.