ஜெயலலிதாவை போலவே முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார் – செல்லூர் ராஜூ

Former AIADMK minister Cellur Raju has lauded Chief Minister Mk Stalin for his efforts in cracking down on rowdies.

ரவுடிகளை ஒடுக்குவதில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு.

மதுரை மாநகராட்சி வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, ரவுடிகள் தொல்லைகள் அதிகமாக உள்ளதால் அதனை ஒடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நங்கள் மனு கொடுத்ததை தொடர்ந்து, ரவுடிகளை பிடித்து சிறையில் அடித்தார்.

அதன்பிறகு தான் மதுரையில் ரவுடி தொல்லைகள் குறைந்தது என தெரிவித்தார்.  இந்த நிலையில், தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க எடுத்த நடவடிக்கைகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போலவே தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்வர் முக ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். ரவுடிகளை ஒடுக்குவதில் முதல்வர் முக ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் பாராட்டு தெரிவித்தார்.