மாணவர்கள் குஷி...இன்று இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

leave today (02.12.2021) only for schools under Tuticorin Circle (Taluk) and Corporation due to heavy rains

தூத்துக்குடி:கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (02.12.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் அந்தமானில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

குறிப்பாக,தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,கனமழை காரணமாக தூத்துக்குடி வட்டம் (தாலுகா) மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்டபள்ளிகளுக்குமட்டும் இன்று(02.12.2021)விடுமுறைஅளிக்கப்படுவதாக,தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ் அவர்கள் அறிவித்துள்ளார்.