அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்களை பற்றி அவதூறு பேசிய கிஷோர் கே சாமி கைது…!

Default Image
  • அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்களை பற்றி அவதூறு பேசிய கிஷோர் கே சாமி கைது.

சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள்  காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிஷோர் கே சாமி மீது 3 பிரிவுகளின் கீழ் சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர் மீது, 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல்,  505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) – ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து,28 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கிஷோர் கே சாமி சைதாபேட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi