நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில் டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.! மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து […]
கோவை முழுவதும் 3,500 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என கோவை ஆட்சியர் பேட்டி. கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு, பொதுச்சொத்துக்கள் சேதம் என தொடர்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனையடுத்து, கோவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சார்பில் பாஜக முக்கிய நிர்வாகிகள் காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இதனையடுத்து, கோவை ஆட்சியர் சமீரன் அவர்கள், கோவையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. […]
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும்,உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறார்.அந்த வகையில், ட்விட்டரில் சுதந்திரமான பேச்சுக்கான இடம் சுருங்கி வருவதை விமர்சித்த எலான்,கடைசி நேரத்தில் ட்விட்டர் குழுவில் சேருவதைத் தவிர்த்து, பின்னர் அதை 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று கைப்பற்றி,அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.எனினும், ஒப்பந்தம் இன்னும் முடிவடையவில்லை. இந்நிலையில்,ட்விட்டரை வாங்குவதற்கான […]
பிரபல சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பட வாய்ப்புகள் இல்லாததால் யூடியூப் சேனலில் திரை விமர்சனங்கள் செய்துவருகிறார். திரைசினிமா குறித்த செய்திகள், நடிகர், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் அதிகம் பேசி வருகிறார். சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் குறித்தும், நடிகை அபிராபி, சிம்ரன் ஆகியோரையும் தொடர்பு படுத்தி இவர் சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் சென்னை முகப்பேர் கிழக்கு […]
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரும்பாலும் தற்பொழுது அரசு பணிகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் முதல் சாதாரண கூலித் தொழில் செய்யக்கூடிய நபர்கள் வரை அனைவருமே சமூக வலைதளங்களில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அரசு பணிகளை செய்யக்கூடிய ஊழியர்கள் சில சமயங்களில் இதனால் சிக்கலில் மாட்டி விடுகின்றனர். தற்பொழுதும் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பெண் போலீஸ் […]
ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கவுள்ள வேளாங்கண்ணி திருவிழாவில், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. நாகையில் வேளாங்கண்ணி திருவிழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவிற்கு மற்ற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட இந்த விழாவில் கலந்துகொள்ள மக்கள் வருவதுண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி திருவிழா நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி திருவிழா தொடங்கவுள்ள நிலையில், […]
திரு கே டி ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழக பாஜக பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கே.டி ராகவன் டுவிட்டரில் அறிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் கே.டி.ராகவன் தொடர்பான பாலியல் வீடியோ ஒன்று வெளியான நிலையில் பாஜக பொறுப்பிலிருந்து கே.டி ராகவன் விலகி உள்ளார். இந்நிலையில், இதுக்குறித்து தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று காலை சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் […]
சமூக வலைத்தளங்களில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல்கள் காரணமாக, அமெரிக்கர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதாக அமரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் வல்லரசு நாடான அமெரிக்காவில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக […]
இனிமேல் சமூக வலைத்தளங்களில் பெண்களை தவறாக சித்தரித்தல் மற்றும் சாதிய மோதல்களை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவிப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக கருத்து பதிவிடுபவர்களை கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாடு காவல்துறை கண்காணித்து வருகிறது. இந்நிலையில் இதுவரை ஆபாசமாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு கருத்து பதிவிட்டு வரக்கூடிய 16 நபர்களை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக இருவர் கைது. தமிழக நிதியமைச்சர் பி. டி. ஆர்.பழனிவேல் தியாராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அவதூறு பரப்பியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியதாக, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, திருமாறனின் கைதை கண்டித்து, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், […]
அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகிய தலைவர்களை பற்றி அவதூறு பேசிய கிஷோர் கே சாமி கைது. சமூகவலைதள பக்கங்களான, ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற இணைய பக்கங்களில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சாமி என்பவர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறான கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, இதுகுறித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த […]
உருமாறிய கொரோனாவிற்கு இந்திய வகை கொடுமை என சமூக வலைதளங்களில் பதிவிட கூடிய கருத்துக்களை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அரசு சமூக வலைதள நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து அண்மையில் இந்தியாவில் முதன்முதலாக பி.1.617 எனும் ஒருவகை கொரோனா கண்டறியப்பட்டது. தற்பொழுது இந்த வகை கொரோனா உலகம் முழுவதும் பரவுவதற்கான அபாயம் தற்பொழுது ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்டதால் இதற்கு இந்திய வகை […]
இந்திய சட்டங்களை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார்.அவர் பேசுகையில், “பேச்சு சுதந்திரம் உள்ளது, ஆனால் 19 ஏ பிரிவு இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று கூறுகிறது,” என்று கூறினார்.ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்கள் வணிகத்தை மேற்கொள்ளும்போது இந்திய விதிகளுக்கு இணங்க வேண்டும். நாங்கள் சமூக ஊடகங்களை மிகவும் மதிக்கிறோம்.இவை […]
மியான்மரில் போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மியான்மரில் ராணுவத்திற்கும், அந்நாட்டின் அரசுக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், தற்போது ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை அடுத்து, அங்கு சமூகவலைதள சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போராட்டங்கள் வெடிக்காமல் இருக்க வரும் 7ஆம் தேதி வரை முகநூல் பயன்பாட்டுக்கு இராணுவம் தடை விதித்துள்ளது. மேலும், அந்நாட்டு அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு இணையதள சேவை வழங்குனர்களால், முக […]
யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இன்று பலரும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் சம்பாதிக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில் யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து வருமானத்தை பெறுபவர்கள் அவர்களின் வருமான வருடாந்திர வருவாய் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால் அவர்களுக்கும் வரிவிலக்கு உண்டு. இது […]
சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் அரசின் ஒரு கடுமையான சட்டத்திற்கு கேரளா ஆளுநரான ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒப்புதலின்படி எந்த ஒரு சமூக ஊடகங்கள் அல்லது இணையதளம் மூலமாக பதிவிடப்படும் அச்சுறுத்தலான பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய […]
17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாக 17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அந்த சிறுவன் அவளிடம் இதை நான் விடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என அதை காண்பித்து, இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் […]
உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியது இதற்காக தான். நடிகர் விஜய்சேதுபதி இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவாக இருந்த 800 படத்தில் நடப்பதற்கு தமிழகத்தில் கடும் எதிப்பு கிளம்பியது. எதிர்ப்பினை தொடர்ந்து, விஜய்சேதுபதி, இந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில், இயக்குநர் சீனுராமசமி செய்தியாளர் சந்திப்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, விஜய்சேதுபதிக்கு எதிராக ட்வீட் செய்ததாக தொடர்ந்து மிரட்டல் வருகிறது. விஜய்சேதுபதிக்கும், எனக்கும் தனிப்பட்ட […]
நடிகர் சிம்பு சமூகவலைத்தளங்களில் இன்று தனது ஆஃபீசியல் அக்கௌவுண்டை திறந்துள்ளார். நடிகர் சிம்பு தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருகிறார். இவருக்கு நடிப்பு மட்டுமல்லாமல் அதை தாண்டி பாடல் பாடுவது, இசை அமைப்பது என பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து இருந்தாலும், சினிமாவில் தொடர்ந்து ஜெயிக்க முடியாத நிலை ஏற்பட்டு அடிக்கடி சறுக்கல் ஏற்பட்டு விடுகிறது. அண்மையில் மிக உடம்பாக காணப்பட்ட இவர், தனது உடல் எடையை குறைத்து ரசிகர்களுக்குப் பிடித்த அழகான தோற்றத்துடன் […]
பெண்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டல். ராமநாதபுரம் அருகே, சமுகம் வலைத்தளம் மூலம் பெண்கள் ஆபாசமாக சித்தரித்து, அந்த பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார்கள் எழுந்தது. இதுகுறித்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தின நிலையில், சந்தேகத்திற்கிடமான சிலரை பிடித்து விசாரித்ததில், பெண்களை ஆபாசமாக படம் பிடித்து, மிரட்டிப் பணம் பறித்து வந்ததும், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போலி முகவரிகளை காட்டி, மிரட்டி வந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த ஜாசம் […]