திருவள்ளூர் :மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் பேசினார். அங்கு அவர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார். விஜய் சினிமாவில் ரூ.200 கோடி வருமானத்தை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்து ரூ.2 லட்சம் கோடி சம்பாதிக்க வருவதாக சாடினார். இது விஜய்யின் அரசியல் நுழைவுக்கு எதிரான மறைமுக விமர்சனமாக பார்க்கப்படுகிறது.
விஜய் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சனம் செய்தார். மேலும் கருணாஸ், “மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் யுத்தக்களமாக இருந்தாலும் உடனே அவர்களைச் சென்று சந்திக்கிறவன்தான் உண்மையான தலைவன். பயந்து ஓடுகிறவர்கள் என்றைக்கும் தலைவர்கள் ஆக முடியாது” என்று கூறி, விஜய்யை மறைமுகமாக சாடினார். இது அரசியல் தலைமைத்துவத்தின் உண்மையான அடையாளம் என்ன என்பதை வலியுறுத்துவதாக அமைந்தது.
கருணாஸ் தனது பேச்சில் தன்னை நடிகனாக மட்டும் அடையாளப்படுத்த விரும்பவில்லை என்று கூறினார். “இந்தக் கூட்டத்திற்கு நான் நடிகனாக வரவில்லை. என்னை நடிகன் என்று அடையாளப்படுத்தினாலும், எடுத்த எடுப்பிலேயே நான் நடிகனாக உருவாக்கவில்லை. என்னை போன்ற எண்ணற்ற கலைஞர்களை வாழவைப்பது நீங்கள்தான்” என்று ரசிகர்களையும் மக்களையும் பாராட்டினார்.“ரூ.200 கோடி சம்பளம் வாங்குறேனா, ரூ.20 லட்சம் வாங்குறேனா என்பது பிரச்சனையல்ல. அதை கொடுப்பது நீங்கள்தான். ஒரு உண்மையான கலைஞன் வாய்ப்புகளை தேடுவதை விட, வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் இதுவரை எந்த தயாரிப்பாளர் வீட்டிலும் வாய்ப்புக்காக போனது கிடையாது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட கருணாஸ், உழைப்பு மற்றும் திறமையே வெற்றிக்கு அடிப்படை என்று வலியுறுத்தினார்.இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஏர்த்துள்ளது. விஜய்யின் அரசியல் பிரவேசத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்தது.
