உளறல் நாயகன் கமல்ஹாசன்!! உதயநிதி ஸ்டாலின் தாக்கு

Default Image

கமல் குறித்து  உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கருத்து  தெரிவித்துள்ளார்.

கமல் கருத்து:

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன்.

முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள்.

கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?. சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை அப்படியே காப்பி அடிப்பது சரியா? .கட்சியை தொடங்கிவிட்டு தேர்தலில் போட்டியிட மாட்டேன் என சொல்வது முறையல்ல.

Image result for kamal haasan mk stalin

மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அது தமிழகத்தை பாதிக்கும்.திமுகவை நான் கடுமையாக விமர்சிக்க திமுகவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே திமுகவை விமர்சிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு திமுகவை விமர்சனம் செய்தார்.இது திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து:

Image result for kamal haasan  udhaynidhi

பின்  கமலின் விமர்சனத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது. கமலின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் .கிராமசபை கூட்டத்தை திமுக நீண்ட காலமாக நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.அதில் கிராம சபைக் கூட்டத்தை நான் தான் கண்டு பிடிச்சேன் என்று அறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
durai murugan periyar
donald trump joe biden
pawan kalyan roja
erode by election 2025
periyar seeman
R Ashwin speech about Hindi