#JustNow: இவர்களுக்கான திருமண உதவித்தொகை உயர்வு – தமிழ்நாடு அரசு

Default Image

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித் தொகையினை 3 ஆயிரமாக உயர்வு.

பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் அவர்கள், 2021-22-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது.

அப்போது, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் “பத்திரிகையாளர் நல வாரியம்” ஒன்றை உருவாக்கப்படும் என அறிவித்து, அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.

அரசாணையில் நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஏனைய பிற நலத் திட்ட உதவிகளுடன், திருமண உதவித் தொகையாக ரூ.2.000  வழங்கப்படும் எனவும் ஆணை வெளியிடப்பட்டது. இந்நிலையில் பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நலத் திட்ட உதவிகளில் திருமண உதவித் தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

tngovt

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்