மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ்..!!

தமிழக முதல்வராக பொறுப்பேற்க்க இருக்கும் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலினை ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2 ஆம் தேதி நடந்தது. இதில், திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வருகின்ற மே 7 ஆம் தேதி பெறுப்பேற்கவுள்ளார்.
முதல்வராக பெறுப்பேற்கவுள் மு.க.ஸ்டாலினிற்கு பலர் தங்களது வாழ்த்துக்களை சமுகவலைத்தளத்திலும் பலர் நேரில் சென்றும் தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் நடிகர் ஜெயராம் மற்றும் அவரது மகன் காளிதாஸ் ஜெயராம் நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ள #திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ஜெயராம், அவரது மகன் நடிகர் காளிதாஸ் ஜெயராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.@kalidas700 @prosathish @teamaimpr pic.twitter.com/fjJSSTgUDx
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 5, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
விண்டேஜ் டஜ்!! 5 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசிய சச்சின்… இந்திய மாஸ்டர்ஸ் அணி அபார வெற்றி!
February 26, 2025
விஜய்யின் வீட்டு வாசலில் காலணி வீசிய நபர்… தவெக ஆண்டு விழாவுக்கு மத்தியில் பரபரப்பு.!
February 26, 2025