3வது நாளாக ஐ.டி ரெய்டு: கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!

Income tax officials have been conducting inspections for the 3rd day on companies that Jesus calls.Assignment of unaccounted assets.

இயேசு அழைக்கிறார் நிறுவனங்களில் 3வது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தலைவரான பால் தினகரனுக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலை உள்பட 28 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது நாள் சோதனையில், கோவையில் உள்ள காருண்யா பலக்லைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று 3வது நாளாக இயேசு அழைக்கிறார் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கணக்கில் வராத சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமடைந்து வருகிறது.