விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது – நீதிபதி என். கிருபாகரன்!

Retiring Judge N. Kirupakaran said that it was satisfying to handle cases without liking or hatred.

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது என பிரிவு உபசார விழாவில் ஓய்வுபெறும் நீதிபதி என். கிருபாகரன் கூறியுள்ளார்.

1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி கிருபாகரனுக்கு நாளையுடன் 62 வயது பூர்த்தியாக உள்ளதால் இவர் நாளை ஓய்வு பெறுகிறார். எனவே, தற்பொழுது இவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் பேசிய நீதிபதி என்.கிருபாகரன் விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த நேரத்தில் தனது தாய் தந்தையருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது – நீதிபதி என். கிருபாகரன்!