கோயில்களுக்கான மானியத் தொகை உயர்வு – காசோலைகளை வழங்கிய முதலமைச்சர்!

Chief Minister MK Stalin presented a check for the government subsidy for the elevated temples.

உயர்த்தப்பட்ட கோயில்களின் அரசு மானியத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உயர்த்தப்பட்ட கோயில்களின் அரசு மானியத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குட்பட்ட 225 கோயில்களின் அரசு மானியம் ரூ.1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 கோயில்களுக்கான அரசு மானியம் ரூ.3 கோடியில் இருந்து ரூ.6 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கான காசோலையை முதலமைச்சர் நிர்வாகிகளுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடன் இருந்தார் என்பது குறிப்பித்தக்கது.