போத்தீஸ் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை..!

சென்னையில் போத்தீஸ் துணிக்கடை மற்றும் உரிமையாளர் வீடுகள் உட்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Pothys

சென்னை :தமிழ்நாடு முழுவதும் போத்தீஸ் ஜவுளி நிறுவனம் தொடர்புடைய 20க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். போத்தீஸ் நிறுவனம், தமிழ்நாட்டின் மிகப்பெரிய டெக்ஸ்டைல் சாம்பல் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி,சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ஈசிஆர்) நீலாங்கரையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் கடை மற்றும் மகன்கள் போத்தி ராஜா மற்றும் அசோக் ஆகிய இருவரின் ஈசிஆர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருவர் வீட்டில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகளின் குழு என 2 மகன்கள் வீட்டில் 12 வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை சுமார் முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்த்தல், பண மோசடி மற்றும் புகார் அடிப்படையில் சோதனை நடந்து வருகிறது.