Thirumavalavan: விசிக தலைவர் திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு. மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து பிரதான கட்சி தலைவர்களும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வரும் மக்களவை தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தில் போட்டியிடுகிறது. சிதம்பரத்தில் தனி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் […]
IT Raid: தமிழகத்தில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரில் உள்ள ஒரு தொகுதி மொத்தம் 40 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடும், வேட்பாளர் பட்டியல், தேர்தல் வாக்குறுதி என தீவிரமாக ஈடுபட்டு […]
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்கப்பட்டு உள்ளது. தீரஜ் சாஹூவுடன் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த மதுபான ஆலையின் பல தொழிற்சாலைகளில் இருந்து கிட்டத்தட்ட ரூ.300 கோடிக்கும் அதிகமான பணத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பாலாரிகிர், திட்லாகர் மற்றும் சம்பல்பூர் தொழிற்சாலைகளில் இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் […]
ராஞ்சியில் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் குமார் சாகு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் ரூ.300 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை (ஐடி) துறையினர் நடத்திய சோதனையின் போது ரூ.300 கோடி மீட்கப்பட்டதையடுத்து, ராஜ்யசபா உறுப்பினர் தீரஜ் சாஹுவிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டுள்ளது. காங்கிரஸ் ஜார்க்கண்ட் பொறுப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏஐசிசி) உறுப்பினர் அவினாஷ் பாண்டே ராஞ்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இது அவருடைய கூட்டுக் குடும்பத்தின் கூட்டுத் தொழில். அந்த குடும்பம் 100 […]
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு சொந்தமான மையங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி,காஞ்சிபுரம்,சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம்,குறிப்பாக ஆர்த்தி ஸ்கேன் மையத்துடன் தொடர்புடைய மருத்துவர்களின் வீடு உட்பட பல இடங்களில் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே,ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியதாக கூறப்படும் நிலையில்,வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் காரணமாக […]
வருமானத்தை விட கூடுதலாக ரூ. 11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு. அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய வீடு உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக,2016- 2021 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியப்பட்டதாகவும்,சென்னை உயர்நீதிமன்றம் […]
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிமாக சொத்து சேர்த்ததாக வேலூரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ஓசூர் உள்ளிட்ட […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ,இக்காலகட்டத்தில் இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் ,போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு,ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் அவர் வீடு உட்பட 20 இடங்களிலும் சென்னையில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் தொகுதியில் […]
திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ வேலுவுக்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை திருவண்ணாமலை திமுக வேட்பாளர் எ.வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எ.வ வேலுவின் கல்லூரி, வீடு, அறக்கட்டளை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர். சுமார் 20 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் […]
சென்னையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நேற்று மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் ஆய்வு முடிந்து, நடிகர் விஜய் பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, மாஸ்டர் படத்திற்கு ரூ.80 கோடியை விஜய் சம்பளமாக பெற்றுள்ளார் என்றும் 2 திரைப்பட வருவாய்க்கும் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளனர். விசாரணை முடிந்தது: நடிகர் விஜயின் சம்பள விபரங்களை வருமானவரித்துறை வெளியிட்டது. #பிகில் படத்திற்கு ரூ.50 கோடி, #மாஸ்டர் திரைப்படத்திற்கு ரூ.80 […]
விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையை நேற்று மாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 15ம் தேதி மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில், படத்தின் இணைத் தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏற்கனவே பிகில் படவிவகாரத்தில் தயாரிப்பாளர், பைனான்சியர் மற்றும் விஜய் ஆகியோரின் சொந்தமான வீடுகளில் வருமான […]
சென்னை மாதவரம் அருகே இயங்கிவந்த ஜெயின் மெட்டல் நிறுவனத்தின் கடந்த 25ம் தேதி முதல் நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. ஜெய்ன் மெட்டல் குழுமத்திற்கு சொந்தமான 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத வருமானம் ரூ.400 கோடி கண்டுபிடித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதனிடையே தனிமென்பொருள் மூலம் வருமான வரித்துறைக்கு தெரியாமல் வருவாய் மறைக்கப்பட்டுள்ளது இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளது. மேலும் பல்வேறு ஆவணங்களும், காசோலைகளை சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர […]
நடிகர் விஜய் விழுந்து விடுவாரா? அல்லது துணிந்து நிற்பாரா? என்பது அவருடைய கையில்தான் உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.இதில் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை சார்பில் அறிக்கையாக தெரிவிக்கப்பட்டது. அதே […]
படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி அளித்தார்கள் என்று தான் பாஜகவினர் போராட்டம் நடத்தினர் என்று பாஜக மூத்த தலைவர் கணேசன் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் ,சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.ஆனால் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்த பின் அவர் […]
நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வரும் நிலையில் தமிழக இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக இருக்கிற விஜய் அஞ்சக் கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் .சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு […]
ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு, வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த ரெய்டு நடப்பதாக தகவல். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்பட 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் […]
கரூர் தொழிலதிபர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த சிவசாமி என்பவர் ஷோபிகா இம்பெக்ஸ் கொசுவலை நிறுவனத்தை நடத்திவருகிறார்.இந்தநிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து வருமான வரித்துறையினர் சிவசாமி வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பீரோவில் இருந்து கட்டுக்கட்டாக ரூ..32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இந்த பணத்தை பணம் பறிமுதல் செய்தனர்.
தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் Kolors நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்து வருகின்றனர். அழகு மேம்பாடு செய்வது,உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளும் நிறுவனம் Kolors .இந்த நிலையில் Kolors உடல் ஆரோக்கிய குழும நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரில் தமிழகம், ஆந்திரா உள்பட 3 மாநிலங்களில் சுமார் 50 இடங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்டோரின் வாக்குமூலத்தை ஆறுமுகசாமி பதிவு செய்துள்ளார். இதில் சிலரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் அவ்வபோது குறுக்கு விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக வந்தார். ஆனால் அவருக்கு இன்று விசாரணை இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால் திரும்பி சென்றார். நேற்று […]
குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ இன்று காலை முதல் சோதனை நடத்திவரும்நிலையில் தமிழக காவல்துறை டி.ஜி.பியான டி.கே.ராஜேந்திரனை மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதால் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் குட்கா அதிபர் மாதவராவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்படுவதாக சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்தனர். குட்கா விவகாரத்தில் சிக்கிய டைரிஇதில் அமைச்சர் விஜயபாஸ்கர் ,டி.ஜி.பி ராஜேந்திரன் , முன்னாள் கமிஷனரான ஜார்ஜ் ஆகியோர் வீடுகளில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருகின்றனர் என்பது […]