#BigBreaking:தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா 80 பேர் பலி

In Tamil Nadu today, close to 15 thousand corona killed 80 people in a single day

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14,796 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட 557 சிறார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,66,329 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,086 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 9,142 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில்,இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,52,186 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்ட 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,475 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 1,00,668 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.