தமிழகத்தில் ஒரே நாளில் 15,684 பேர் பாதிப்பு;94 உயிரிழப்பு-உச்சத்தில் இருக்கும் சென்னை

In Tamil Nadu today, 15,684 people were affected 94 people dead

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் புதிதாக 15,684 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை ஆக 10,97,682 அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,250 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று மேலும் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 13,625 ஆக உயர்ந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் இன்று மட்டும்  13,625 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.இதுவரை தமிழகத்தில் 9,76,876 பேர் வீடு திரும்பியுள்ளனர்.1,07,145 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பில் 44 பேர் தனியார் மருத்துவமனை மற்றும  50 பேர் அரசு மருத்துவமனைகளில் உயிரிழந்துள்ளனர்.இதில் சென்னையில் மட்டும்  35 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.