பாஜகவினரை நானும் எதிர்த்து வந்தேன்-தம்பிதுரை

I was opposed to the BJP thambidurai

மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.

பாஜகவினர் அதிமுகவை விமர்சித்த வந்ததால் தான் நானும் அவர்களை எதிர்த்து வந்தேன் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

இந்நிலையில் கரூரில்  பாஜக தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  பாஜகவினர் அதிமுகவை விமர்சித்த வந்ததால் தான் நானும் அவர்களை எதிர்த்து வந்தேன்.அதேபோல் வைகோ தன் தோளில் போட்டிருக்கும் துண்டை தான் மோடி வரும் போது எடுத்து காண்பித்து இருப்பார் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.