சிங்கத்தை பிடித்துச்சென்ற எமனுக்கு மாபெரும் கண்டனம்.! போஸ்டர் ஒட்டிய ஆதரவாளர்கள்.!

- மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர்.
மதுரை வடக்குமாசி வீதியில் 51வது வட்ட திமுக பிரதிநிதி அ.அடைக்கலம் என்பவரின் தந்தையார் அய்யாவுக்கோனார் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவர் இறந்ததை தாங்கமுடியாத ஆதரவாளர்கள், தங்களது எதிர்ப்பை எமதர்மன் பக்கம் திருப்பியுள்ளனர். அதாவது சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமதர்மனுக்கு மாபெரும் கண்டனம் என அச்சிடப்பட்ட போஸ்டர் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் அவர்களது புனைப் பெயருடன் அச்சிடப்பட்டுள்ளது. பீம்பாய் வினோத், சீடை வினோத், வேட்டையன் பிரித்வி, குதிரை குத்தி சரவணன், நாய்ப்பால் ரஞ்சித் என பல்வேறு பெயர்கள் அதில் உள்ளன. இந்த நிலையில் பல்வேறு கண்டன போஸ்டர்களை பார்த்த மதுரையில், எமதர்மனுக்கு கண்டன போஸ்டர் அடித்த சம்பவத்தைப் பற்றி அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
February 25, 2025
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025