வரலாற்றில் இன்று(18.01.2020)… பொது உடைமை சிங்கம் ஜீவானந்தம் மறைந்த தினம் இன்று..

- பொது உடைமை சித்தாந்தத்தின் நாயகன், சுயமரியாதை சிங்கம் ஜீவாவின் பிறந்த தினம் இன்று.
- இந்நாளில் இவரை நினைவு கொள்வோம்.
ஆகஸ்ட் மாதம் 21தேதி 1907ம் ஆண்டு முதல் ஜனவரி மாதம் 18 தேதி 1963 ஆண்டு வரை ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு பல்வேறு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ப. ஜீவானந்தம் ஆவார். இவர் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையிலேயே கழித்தார். இவர் ஒரு காந்தியவாதியாகவும், சுயமரியாதை இயக்க வீரராகவும், தமிழ்ப் பற்றாளராகவும், அனைத்திற்கும் மேலாக சிறந்த ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.இவர் தம்மை ஒரு நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். ப. ஜீவானந்தம் கலை இலக்கிய உணர்வுள்ள பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர்.
மேலும் இவர் குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த நயமிக்க பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். இந்தியாவிலே பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். மேலும் இவர், கேரளாவின் வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்ற போராட்டங்களில் பங்கேற்றவர் ஆவர். இவர் கடந்த 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவர். அனைத்து மக்களாலும் ஜீவா என்று அன்போடு அழைக்கப்படும் இவர் மறைந்த தினம் இன்று.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025
வழக்குக்கு பயந்து மத்திய அரசுக்கு மண்டியிடுவதுதான் கோழைத்தனம்! அன்புமணி பேச்சுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி!
February 24, 2025
மூன்றே நாட்களில் 50 கோடி…பட்ஜெட்டை தூக்கி அசத்திய டிராகன்!
February 24, 2025