தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வெளுக்கப்போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

மே 22 முதல் 26 வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

Hero Image

சென்னை: தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாகச் சில மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான மழை எச்சரிக்கை:

  • மே 22: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் (40-50 கி.மீ வேகம்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
  • மே 23: நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு.
  • மே 24: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
  • மே 25 & 26: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்புள்ளது.

கனமழை அலர்ட்: மே 22 முதல் 26-ம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

வெப்பநிலை மாற்றம்: மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப அலை (Heat Wave) வீசக்கூடும்.

அசௌகரியம்: மே 23 அன்று கடலோரப் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக மக்கள் அசௌகரியத்தைச் சந்திக்க நேரிடலாம். மேலும், பிற மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மழைப்பொழிவு குறைந்து, இயல்பான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்யும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், இடி மின்னலின் போது பாதுகாப்பாக இருக்குமாறும், மரங்கள் அல்லது மின் கம்பங்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.