#HevayRain: தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

A new depression has formed in the south-eastern Bay of Bengal and is likely to rain again Tamil Nadu Meteorological Center

தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், இன்றும், நாளையும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் நவம்பர் 30-ஆம் தேதி தென்தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், வருகின்ற டிசம்பர் 1ம் தேதி தென் தமிழகத்தில் கனமழை முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.