சென்னையில் தேசியக் கொடியேற்றிய ஆளுநர் பன்வாரிலால்...!

Purohit hoisted the national flag by Governor Banwar in front of the Gandhi statue at Kamaraj Road, Chennai Marina Beach.

இந்தியாவின் அரசியல் அமைப்பு சாசனம் அமலுக்கு வந்த தினத்தை குடியரசு தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 72-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேசியக்கொடி ஏற்றினார். கொடியேற்றிய பின்னர் ஆளுநர் பன்வாரிலால் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குடியரசு தின விழாவில் ஆளுநருடன் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் குடியரசு தின விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.