சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 சரிந்து ரூ.1,18,080-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.140 குறைந்து ஒரு கிராம் ரூ.14,760-க்கு வர்த்தகம் நடக்கிறது.நேற்று சவரன் ரூ.1,19,200-க்கும் கிராம் ரூ.14,900-க்கும் விற்ற நிலையில், இன்று தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்க விலை, இப்போது குறைந்து வரும் போக்கில் உள்ளது.வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 சரிந்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,80,000-க்கு வர்த்தகம் நடக்கிறது. நேற்று கிராம் ரூ.290-க்கு விற்ற நிலையில், இன்று தங்கத்துடன் இணைந்து வெள்ளியும் சரிந்துள்ளது.
2025 தொடக்கத்தில் இருந்தே தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி சவரன் முதல் முறையாக ₹1,00,000 மைல்கல்லை எட்டியது. அதன் பிறகு தொடர்ந்து உயர்ந்து ₹1,20,000-ஐ தாண்டியது. வெள்ளி விலையும் கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ ₹4.25 லட்சம் வரை சென்றது.இன்றைய விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. திருமண சீசன் நெருங்கும் நிலையில் இந்த சரிவு பலருக்கு உதவியாக இருக்கும். இருப்பினும் சர்வதேச சந்தை மற்றும் போர் பதற்றம் காரணமாக விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதால், வாங்குபவர்கள் சந்தை நிலவரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
