சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம்.

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக இருந்த  பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றுவிட்டார்.இருந்தாலும்  சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க  சிறப்பு அதிகாரியாக, பொன்.மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.

இந்நிலையில் பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

unknown node

இன்று  இந்த வழக்கில்  நீதிபதிகள் அசோக் பூஷன், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.அதில்,சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணை ரத்து செய்தது.அதேபோல்,  சிலை கடத்தல் வழக்குகளில் கைது நடவடிக்கைகளை பொன்.மாணிக்கவேல் செய்ய கூடாது என்றும்  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் தொடரலாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.