திடீரென உச்சம் தொட்ட தங்கம் விலை....சவரனுக்கு ரூ.240 உயர்வு.!

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, சென்னையில் சவரன் ரூ.44,800க்கு விற்பனை.

gold rate

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, சென்னையில் சவரன் ரூ.44,800க்கு விற்பனை.

அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில் நேற்று சென்னை விலை அதிரடியாக உயர்ந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. அதன்படி, ரூ.44,560 என விற்ற ஒரு சவரன் தங்கம் தற்போது ரூ.44,800 என விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதைப்போல, வெள்ளியின் விலை கிராமுக்கு  30 காசுகள் உயர்ந்து 1 கிராம் வெள்ளி ரூ.78 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.78.000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.