சென்னை : தமிழகத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகைப்பிரியர்களைக் கவலை அடையச் செய்துள்ளது. இந்நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்கம் விலை விவரம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி, தங்கம் சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,11,720 என்ற புதிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், தங்கம் கிராமத்திற்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,965-க்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கம் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் பழைய விலையே தொடர்கிறது.
அதன்படி, ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,50,000-க்கும் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
