#BREAKING: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு ஒத்திவைப்பு..!

Default Image

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து  சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

பின்னர், 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தனர். சமீபத்தில் தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு முன்னாள்  எஸ்.பி கண்ணன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நவம்பர் 8-ஆம் தேதி முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன் கட்டாயம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 29-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவம்பர் 1-ம் தேதி( இன்று)  முன்னாள் சிறப்பு டிஜிபி  நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்