"முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்" – திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு

DMK MLA Thangam Tennarasu said that Mafa Pandiyarajan was the Tamil Development Minister during the Cheikh rule.

“முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்” என திருச்சுழி தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளதால், அதற்கான பணிகளை அனைத்து கட்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, “முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவிட்டு பேசுங்கள்” என கருத்து தெரிவித்தார்.

மேலும், சேக்கிழார் ஆட்சியில் மாஃபா பாண்டியராஜன் தான் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் என கூறிய அவர், மு.க.ஸ்டாலினின் பேச்சை புரிந்துக்கொள்ள முடியாமல் பொருளாதார பாடம் எடுக்க நினைக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.