புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைத்துள்ள அமைச்சர் எல் முருகனுக்கு வாழ்த்துக்கள் என்று முன்னாள் முதல்வர் ட்வீட். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் இடம்பெற்றிருந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற எல் முருகனுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து […]
“முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லி கொடுத்துவிட்டு பேசுங்கள்” என திருச்சுழி தொகுதி திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்கவுள்ளதால், அதற்கான பணிகளை அனைத்து கட்சியும் மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு, “முதலில் எடப்பாடிக்கு தமிழ் சொல்லிக்கொடுத்துவிட்டு பேசுங்கள்” என கருத்து தெரிவித்தார். மேலும், சேக்கிழார் ஆட்சியில் […]
தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை அதிமுக முடிவு செய்தாலும் அதை பாஜக தான் அறிவிக்கும் என எல்.முருகன் கூறிய நிலையில்,அவரை நீக்க வேண்டியிருக்கும் -அதிமுக செய்தித்தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.நீண்ட நாட்களாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து முடிவு எடுப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் பல கட்ட ஆலோசனைக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சர் […]
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் , இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி நேற்று முதல் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை […]
அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுக சட்ட திட்ட விதிமுறைகளின்படி,கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான நிறைவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.கட்சியில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக,கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு […]
சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையின் படி, தொலைநோக்குப் பார்வை இல்லாமலும் நிர்வாகத் தவறுகளாலும் கொரோனா பரவத் தொடங்கிய நாட்களிலிருந்து தற்போது பெரிய அளவில் பரவியுள்ள நிலையில் இலட்சக்கணக்கான உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. அடுத்தவர் மீது பழி போட்டுத் தப்பிப்பது அக்கறையற்ற அணுகுமுறை தவறான செயல்பாடுகள் என ஒவ்வொரு […]
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அளவில் மேற்கொள்ளபட்டு கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதாவது அரசால் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனா […]
தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி 20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், […]
முதலமைச்சர் பழனிச்சாமி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.அந்த வகையில் நேற்று இங்கிலாந்து நாட்டிற்கு சென்றார்.இன்று சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் தமிழக அரசு மேற்கொண்ட 2 புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தானது .மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் பணி தரத்தினை மேம்படுத்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மலேரியா, டெங்கு போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தவும், அந்த வகையான நோய்களை கையாளும் முறைகளை அறியவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆய்வு நடைமுறையில் இல்லாத ஒன்று.ஆனால் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தங்களது பதவியை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளனர். இனி வரும் தேர்தலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.மேலும் சட்டப்பேரவையில் கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன்.நடந்து முடிந்த ஆர்.கே.நகரில் திமுக முறையாக வாக்கு சேகரித்து இருந்தால் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும்.2ஜி வழக்கில் சிபிஐ சரியாக செயல்படாததால் ஆ.ராசா, கனிமொழி விடுதலையானார்கள் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி […]