பட்டாசு ஆலை விபத்து – மேலும் ஒரு குத்தகைதாரர் கைது.!

Another tenant has been arrested in connection with the Mariammal firecracker factory blast near Sattur in Virudhunagar district.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒரு குத்தகைதாரர் கைது ஆகியுள்ளார்.

ஏற்கனவே வெடிவிபத்து தொடர்பாக உள் குத்தகைதாரர் பொன்னுப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு குத்தகைதாரர் சக்திவேல் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனிடையே, வெடிவிபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் அதிகமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் சிலருக்கு பலத்த தீக்காயம் உள்ளதால் அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.