விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த மாயத்தேவன் பட்டியில் ‘ஜெயந்தி பட்டாசு’ என்ற பெயரில் ஆலை ஒன்று இயங்கி வருகிறது.ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான இந்த ஆலையில் சுமார் 60-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை பணிக்காக வந்த ஊழியர்கள், வழக்கம்போல் அவர்களின் வேலைகளை பார்த்து வந்துள்ளனர். அப்போது, பட்டாசு தயாரிப்பதற்கான […]
கடலூர் எம்.புதூரில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பா இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் அறிவிப்பு. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் பலியானார். இந்த நிலையில், சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த அரவிந்த் (32) என்பவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். செல்வஜோதி பயர் ஒர்க்ஸ் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் அறை தரைமட்டமாகிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு எல்லையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தங்கவேல், கண்ணன், ராமர், ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒரு குத்தகைதாரர் கைது ஆகியுள்ளார். ஏற்கனவே வெடிவிபத்து தொடர்பாக உள் குத்தகைதாரர் பொன்னுப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு குத்தகைதாரர் சக்திவேல் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனிடையே, வெடிவிபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்த […]
மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய், பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது என்று பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், ஒருவர் கைது செய்தது காவல்துறை. இந்த துயர சம்பவம் அறிந்து பலரும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், […]
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை ஒருவரை கைது செய்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இதுவரை 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலை உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சாத்தூர் அருகே கர்ப்பிணி உட்பட 19 பேர் உயிரிழக்க காரணமான […]
விருதுநகர் பட்டாசு அலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர். அச்சகுளத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் காயமடைந்த 33 பேருக்கு அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் பள்ளி மாணவி உட்பட 11 பேர் பலியான செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் என முக ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இயங்கி வந்த பட்டாசு அலையில் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதுபோன்று […]
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்த […]
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய மாரியம்மாள் எனும் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையில், பணிபுரிந்த 11 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு […]