ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிப்பு..!

The Arumugasami Commission of Inquiry into Jayalalithaa's death has been extended. has been extended for the tenth time

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017- ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடா்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உறவினா்கள், அமைச்சா்கள், அப்பல்லோ மருத்துவா்கள், அரசு மருத்துவா்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாதம் கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டது. பத்தாவது முறையாக கால நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.