வெடி விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர்!

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர்.

வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர்.

விருதுநகர் மாவட்டத்தில் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கீழாண்மறைநாடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தென்காசி மாவட்டம், வீரணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் (வயது 35) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

இதே விபத்தில் கடும் காயமடைந்த விளாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பவானீஸ்வரனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறன். இந்த வெடி விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் மற்றும் கடும் காயமடைந்த பவானீஸ்வரனுக்கு ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.