சாமி கூடத்தான் ஆடை இல்லாமல் இருக்கிறது – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

Kamal Haasan has questioned why half-dressed Samis do not appear when they look at women. Maiam Maadhar Sangamam Meeting.

அரைகுறை ஆடை அணிந்திருக்கும் சாமிகளை பார்த்து தோன்றாதது, பெண்களை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவைக்கான பரப்புரையை மேற்கொண்டு வரும் கமல்ஹாசன், இன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆடைகள் காரணமாக்கப்படுவது தவறு என்றும் வன்கொடுமைகளுக்கு பெண்கள் அணியும் ஆடைகளை குறை சொல்வதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், சாமிகூடத்தான் குறைவான ஆடை அணிந்திருக்கு, அதில் சில சாமி ஆடையில்லாமல் கூட இருக்கிறது. அப்போ தோன்றாதது, நம் சகோதிரிகளை பார்க்கும்போது மட்டும் ஏன் தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசியல் விதியை பெண்கள் மட்டுமே நினைத்தாலே மாற்ற முடியும் எனவும் பேசியுள்ளார். தற்போது, கமல்ஹாசனின் சர்ச்சையான பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.