பொறியியல் ரேண்டம் எண் ... திங்கள் கிழமை வெளியிடப்படும் என தகவல்...

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.

அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான பொறியியல் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ந் தேதி ரேண்டம் எண்  வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்நிலையில், மாணவர்கள் சிலர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கோரினர். இதையடுத்து தரவரிசை பட்டியல் 25-ந் தேதி (நேற்று) வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. இந்நிலையில் பொறியியல்  படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ந் தேதி திங்கட்கிழமை வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.