குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சாம் இன்பெண்ட் ஜோன்ஸ் எனும் இளைஞர் மீது குழந்தைகளிடம் இணையம் வழியாக ஆபாச படங்களை பகிர்வது தொடர்பாகவும் இணையத்தில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து தொடர்பாகவும் அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் சாம் கைது செய்யப்படலாம் […]
கட்சி விவகாரம் தொடர்பாக பதில் சொல்ல நேரமில்லை என விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார். பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஜய் அவர்களின் தந்தையும் பிரபல இயக்குநருமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் அண்மையில் விஜய் மக்கள் இயக்கம் எனும் பெயரில் அரசியல் கட்சி துவங்கியுள்ளதாக சலசலப்புகள் ஏற்பட்டது. இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், இந்த கட்சியில் தனது ரசிகர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கட்சியில் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் அவ்வாறு […]
படப்பிடிப்பு தளத்திலேயே பலமுறை சுஷாந்த் சிங் ராஜ்புட் தன்னுடைய கேரவனுக்குள் போதை பொருளை உட்கொண்டதையும் தான் பார்த்ததாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தகவல். பிரபாஸ் நடித்த சாஹோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். தற்போது, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள போதை மருந்து வழக்கு சர்ச்சையில் சிக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். சுஷாந்த்தின் காதலி ரியா சக்கரபோர்த்தியிடம் நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூரின் பெயரும் வெளியானதால் […]
இந்தியா மற்றும் டென்மார்க் இடையே இருதரப்பு உச்சிமாநாட்டின் போது சீனாவை தாக்கும் வகையில் கடுமையாக கருத்தை பிரதமர் மோடி வெளிப்படுத்தினார். எந்த ஒரு பொருளின் தேவைக்கும் உலகமே ஒற்றை இடத்தை நம்பியிருப்பது ஆபத்தானது என்பதை இந்த கொரோனா காட்டிவிட்டது என்று சீனாவை மறைமுகமாக சாடினார். இந்தியாவில் வளர்ந்து வரும் காற்றாலை ஆற்றல் துறையில் டென்மார்க் நாடு மிகப்பெரிய பங்குதாரராக உருவெடுத்துள்ளது. அத்துடன் இந்தியாவின், வெண்மை புரட்சிக்கும் கைகொடுத்து வருகிறது. இந்தியாவும் டென்மார்க்கும் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்டு […]
பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை மரணத்தை தொடர்ந்து, இவ்வழக்கை காவல்துறையினர் தீவிரப்படுத்தினர். இதனையடுத்து விசாரணையில் அவரது காதலி ரியா சக்கரபோர்த்தி கைது செய்யப்பட்டார். சுஷாந்த் சிங்கிற்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் இருந்தது என்பது அவர் மூலமாக தெரிய வந்தது. இது குறித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தியபோது பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, ஸ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான் உள்ளிட்ட சில நடிகைகள் போதை பொருள் […]
தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூன்றுபேரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இது தொடர்பாக, அரசராஜன், (19) கதிரேசபிரபு, (20), மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதி, பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் […]
தலைநகர் தில்லியில் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், அமெரிக்காவிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 290 கோடி செலவில் முப்படைகளுக்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி இந்திய கடற்படை மற்றும் விமானப்படைக்கு ரூ.970 கோடியில் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் வாங்கவும், ராணுவத்திற்கு ரூ.780 கோடியில் 72 ஆயிரம் சிக் சாயர் தானியங்கி துப்பாக்கிகளை வாங்கவும் அனுமதி […]
தலைமறைவான இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளியை, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா, 36, கோவை மாவட்டத்தில் போலி ஆதார் அட்டை பெற்று பிரதீப் சிங் என்ற பெயரில், 2018 முதல் தமிழகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 3ல், உயிரிழந்த நிலையில், மதுரையில் இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அம்மானி தான்ஜி, சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின், அங்கொட […]
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில், முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். கே எல் ராகுல் அரை சதமடித்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 224 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து, ஐ.பி.எல். வரலாற்றில் அதிகப்படியான ஸ்கோரை […]
காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணற்றில் இஸ்ரோ மையம் அமைந்துள்ளது. இதன் அருகில் தமிழக அரசின் வேளாண்மை துறையின் மலர் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம் கடந்த சில ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலையில் இந்த மலர் வணிக வளாகத்தில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. அது […]
டிரம்ப் தனது வணிக நிறுவனங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை டைம்ஸ் குற்றச்சாட்டு. டொனால்டு டிரம்ப் தனது ரியாலிட்டி தொலைக்காட்சி திட்டம் மற்றும் பிற உரிம ஒப்பந்தங்களில் இருந்து 2018 க்குள் 7 427.4 மில்லியன் டாலர் வருமானம் பெற்றிருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகள் வருமான வரிகளை செலுத்தவில்லை. கடந்த 2016 மற்றும் 2017 இரண்டிலும் கூட்டாட்சி வருமான வரிகளில் $ 750 செலுத்தி உள்ளார். டிரம்ப் தனது […]
கொசஸ்தலை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணை நிரம்பி வந்ததால் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இதுவரை 4 முறை கொசஸ்தலை ஆற்றில் தண்ணீரை ஆந்திர மாநில அதிகாரிகள் திறந்து விட்டனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் 5-வது முறையாக சுமார் 300 கன அடி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. […]
இங்கிலாந்தில் கொரோனா பெருந்தொற்றை தடுக்க போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர், இங்கிலாந்து ராணி எலிசபெத் பிறந்த நாள் விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர். ஐரோப்பிய நாடான இங்கிலாந்தில், இரண்டாம் எலிசபெத் ராணியின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆண்டு தோறும், நாட்டில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவப்படுத்துவது வழக்கம். இதன்படி இந்தாண்டு ராணி எலிசபெத்தின், 94வது பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் கவுரவத்திற்குரியோர் பட்டியல், வழக்கமான முறையில் வெளியிடப்பட்டது.கொரோனா பரவல் காரணமாக, அந்த பட்டியல் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை மீட்க, போராடி […]
உளவுத் துறையினர், தில்லியில் தன் அறையில் புகுந்து மிரட்டியதாக மக்களவை சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார், இதுகுறித்து விசாரிக்க சபாநாயகர் உத்தரவு. வேலுார் தொகுதி, திராவிட முன்னேற்ற கழக – நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்தை உளவுத்துறையினர் அவரது அறையில் புகுந்து மிரட்டியது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லா அவர்கள், ‘இது மிகவும் சீரியஸான விஷயம்… உடனடியாக இதை தில்லி காவல்துறையினர் விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும்’ என, தில்லி காவல்துறையினருக்கு உத்தர விட்டார். இது தொடர்பாக டில்லி […]
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின், 75ம் ஆண்டு கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, இந்த கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, பேசி வருகின்றனர். எனவே உலகத்தலைவர்கள், தங்கள் உரையை முன்கூட்டியே, ‘வீடியோ’ வில் பதிவிட்டு அனுப்பி வைக்கின்றனர். இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி நேற்று பேசியதாவது, ஐக்கிய நாடுகளின் நிறுவன உறுப்பினர்களில், இந்தியாவும் ஒன்று என்பதில் பெருமைப்படுகிறோம், இந்த வரலாற்றுச் […]
தமிழகத்தை சேர்ந்த சென்னை ,திருவொற்றியூர், லட்சுமிபுரம், காசிமேடு, திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 மீனவர்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆகஸ்டு 7-ந் தேதி கரைக்கு திரும்புவதாக திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், கடலில் ஏற்பட்ட அதிவேக கடல் சீற்றத்தால் மீனவர்களின் படகு தனது கட்டுப்பாட்டை இழந்து தவித்து உள்ளனர். இவர்களை மியான்மர் நாட்டு கடற்படை வீரர்கள் காப்பாற்றி சென்றனர். இது குறித்து மீனவர் […]
மத்திய அரசின் புதிய திட்டத்தில், இலவச ஆடை உற்பத்தி பயிற்சி முடித்து, உடனடி வேலை வாய்ப்பு பெற, கிராமப்புற இளைஞர்களுக்கு திருப்பூர் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி அழைப்பு விடுத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி மத்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா என்ற திட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு ஆடை உற்பத்தி பயிற்சி அளித்துவருகிறது. இதற்காக, திருப்பூர் முதலிபாளயம் ‘நிப்ட் – டீ’ கல்லுாரி வளாகத்தில் […]
ஐ.நா.வின் 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் நேற்று முன்தினம் மெய்நிகர் முறையில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். மேலும் காஷ்மீர் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொண்ட சட்ட நடவடிக்கையை (சிறப்பு அந்தஸ்து நீக்கம்) ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் உரிமையின் கீழ் இந்தியா அறிக்கை ஒன்றை பொதுசபை அரங்கில் […]
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் இரங்கல் செய்தி விடுத்துள்ளார். அதில், என்னுடன் சக வேலை செய்யும் நண்பர்களில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என்னுடைய உடன்பிறப்பு போன்றவர். பாலு என்னை அண்ணா என்று கூப்பிடும்போது, நாங்கள் ஒரு அம்மா வயிற்றில் பிறந்தவர்கள் போல நான் உணர்வேன். நாங்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் போல பழகினோம். முன் ஜென்மத்தில் நாங்கள் இருவரும் சகோதரர்களாக இருந்திருக்கலாம். பாலு முறையாக சங்கீதம் கற்கவில்லை என்றாலும், அவருடைய சங்கீத ஞானம் மிகப்பெரியளவில் இருக்கும். […]
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல.சுப்பிரமணியன், அவர்கள் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கூறப்பட்டு இருப்பதாவது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது […]