பொதுத்தேர்வில் வேறு பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளராக நியமிக்க கல்வித்துறை உத்தரவு.!
- மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
- இந்நிலையில், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகள் தேர்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் அவரவர் பள்ளியிலேயே அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களையே 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு தேர்வுக்கும் வெவ்வேறு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் உள்ளது போல் டம்மி ஷீட் முறையையும் 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறித்தியுள்ளது. தேர்வில் முறைகேட்டைத் தவிர்ப்பதற்காக டம்மி ஷீட் முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.