மும்பை: கடந்த 2018 ம் ஆண்டு மும்பையில் வசித்து வரும் அஹ்சன் கராபி ஈ-காமர்ஸ் இணையதளமான பிளிப்கார்ட்டில் செருப்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அது அப்போது அவருக்கு டெலிவரி ஆகாமலே இருந்து உள்ளது. இந்நிலையில், இன்று அந்த டெலிவரி உங்களுக்கு வந்துவிடும் என தினம் தோறும் அந்த ஆப்பில் காட்டி கொண்டே இருந்துள்ளது. ஆனால் அவருக்கு அந்த ஆர்டர் சென்றடையவில்லை. மேலும், 6 வருடங்களுக்கு இன்று அவருக்கு அவர் ஆர்டர் செய்த செருப்பானது டெலிவரி ஆகியுள்ளது. […]
சுங்கச்சாவடிகளில் மஞ்சள் கோட்டைத் தாண்டினால் வாகனங்களை கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என்று சுங்கச்சாவடி ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களில் அதிகபட்ச நேரங்களில் கூட ஒரு வாகனத்திற்கு 10 வினாடிகளுக்கு மிகாமல் சேவை நேரத்தை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்(NHAI)வெளியிட்டது.அதன்படி,கடந்த பிப்ரவரியிலிருந்து இருந்து FASTAG முறை அறிமுகப்படுத்தப்பட்டு 100% பணமில்லா டோலிங்காக மாறியுள்ளது. இந்நிலையில்,சுங்கசாவடிகளின் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறும்,இந்த […]
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,கொரோனா தொற்றினால் […]
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப் படுகிறது என்றும்,இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது.அதன்படி,பசும்பாலின் தற்போதைய கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டு ரூ.28 இல் […]
கொரோனா தொற்றிலிருந்து பசுக்களை பாதுகாக்க உத்திரப்பிரதேச அரசு,ஒவ்வொரு மாட்டத்திலும் பசு உதவி மையம் அமைக்க உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பானது மிகவும் தீவிரமடைந்துள்ளது.இதனால்,நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை வசதியை பெற முடியாமல் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிகின்றனர். இதனைத்தொடர்ந்து,உத்திரப் பிரதேசத்திலும் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் உயிரிழந்து வருகின்றனர்.இதனையடுத்து,இறந்தவர்களின் உடலை எரிப்பதற்காக 5-6 மணி நேரம் […]
பழைய சாலையை தோண்டிவிட்டு, புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிய வலகழகை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பழைய சாலையை தோண்டி விட்டு, அந்த இடத்தில் முறையாக புதிய சாலை அமைக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மனுவில் பழைய சாலைகளை தோண்டாமல் புதியதாக சாலைகளை போடுவதால், கோவில்கள், சிலைகள், நினைவு சின்னங்கள் ஆகியவை தாழ்வான பகுதிகளுக்கு சென்று விடுவதால் பழைய சாலைகள் தோண்டப்பட்ட […]
இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் […]
அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜாகவினர் சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில இடங்களில் வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. […]
பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் அக்.,14ம் தேதி முதல் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: மேல்நிலை முதலாம் ஆண்டு (+1 அரியர்), இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியல் (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்ளிடவைகள்) அக்.,14ம் தேதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.மேலும் பள்ளி […]
தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை நாளை திறக்க தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், மதுவை ஆன்லைனில் விற்க முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. அதற்கு மதுபானத்தை ஆன்லைனில் விற்க முடியாது என்று தமிழக அரசு பதில் தெரிவித்தது. […]
கள்ளச்சந்தையில் பறிமுதல் செய்த மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்களே முடிவெடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் மளிகைகடைகள்,காய்கறிக்கடைகள் உள்ளிட்டவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இதனால் வணிக வளாகங்கள்,ஷாப்பிங் மால்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் டாஸ்மாக் கடைகளை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதன்விளைவாக மதுபானங்கள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவது அதிகமாகி வருகிறது. எனவே போலீசார் இதனை தடுக்க தமிழகம் […]
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான 1948ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் விதிகளிலும், 1959ம் ஆண்டு உணவு நிறுவனங்கள் விதிகள் முறையே 1983 மற்றும் 1984ம் ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெயர்ப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் முதன்மையாகவும், ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்கவேண்டும் என்றும், இந்த […]
கடந்த சட்டசபை தேர்தலில் திண்டிவனம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சீதாபதி சொக்கலிங்கம் 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, அந்த தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு விசரணைக்கு இன்று வந்தது. அப்போது திண்டிவனம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சீதாபதியின் வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் […]
நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவுட்டுள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி […]
மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இந்நிலையில், தேர்வுப்பணியில் வேறு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று தேர்வுத்துறைக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கு முன் ஏற்பாடுகள் […]
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இது சுமார் 11 மாதங்களாக நடைபெற்று […]
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்ட அவரை, கைது செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் இதுபோல் கருத்துக்களை பதிவு செய்பவர்களின் பட்டியலை சேகரித்து அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று ஏடிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாகவும், அவதூறு கருத்துகளை பதிவிட்டுருந்தார். […]
டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் […]
பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டயிடங்களில் அசுத்தம் செய்வது, குப்பையை கொட்டுவது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகைகள், போன்ற செயல்களால், பல தொற்று நோய்கள் மக்களிடம் பரவி வருகிறது. பின்னர் ஆங்காகே பயன்படுத்தும் […]
13 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் சிசிடிவி பதிவை மதியம் 12.30க்குள் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக 10 வழக்கறிஞர்கள் முறையிட்டதால் உயர்நீதிமன்றம் கிளை உத்தரவுவிட்டது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, இரண்டு தினங்கள் வாக்கு எண்ணிக்கை மும்மரமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியை வீடியோ எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் […]